×

அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்!!

கொழும்பு: இலங்கை அமைச்சரவை நேற்றிரவு கூண்டோடு ராஜினாமா செய்ததால், புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனயும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிசும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்காலிக அமைச்சர்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘நாளை இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. சபாநாயகராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தலைமை கொறடாவாக  தினேஷ் குணவர்தன செயல்படுவார்கள். மேலும், நாட்டின் அன்றாட செயற்பாடுகளுக்காக நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நிதி அமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனயும்,  வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிசும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sri Lanka ,President Gotabhaya Rajapaksa , President, Gotabhaya Rajapaksa, Sri Lanka, Ministers
× RELATED இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை...